#JustNow: மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தடுப்புப் பிரிவுகளின் கீழ் கைது.

மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தடுப்புப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த ஹவுரா பகுதிக்கு செல்ல முற்பட்டதால் மேற்குவங்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது,  ஹவுராவில் வன்முறை காரணமாக அங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு சென்றபோது, தடுப்புப் பிரிவுகளின் கீழ் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அந்தவகையில்,
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பஞ்சால் பகுதியில் இன்று காலை வன்முறை ஏற்பட்டது.

ஹவுராவில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் அங்குள்ள உள்ளூர் கிளப்பை தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் கலைக்க முயன்றபோது, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதன்பின் வன்முறை பரவுவதை தடுக்க மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மாநிலத்தின் வன்முறை மையமாக மாறியுள்ள ஹவுராவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், மேற்கு வங்கம் மாநிலம் புதிய ஹவுரா போலீஸ் கமிஷனராக ஐபிஎஸ் பிரவீன் திரிபாதியும், புதிய ஹவுரா ரூரல் எஸ்பியாக ஐபிஎஸ் ஸ்வாதி பங்காலியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறி அங்கு செல்ல முற்பட்டதால் அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கைது செய்யப்பட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

12 minutes ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

24 minutes ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

27 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

57 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

2 hours ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

2 hours ago