#Justnow:விஸ்மயா தற்கொலை வழக்கு;கணவருக்கு என்ன தண்டனை?- கேரளா நீதிமன்றம் இன்று அறிவிப்பு!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா என்னும் மாணவி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்த நிலையில்,விஸ்மயாவுக்கு (வயது 22) கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமாரோடு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை,ஒரு ஏக்கர் நிலம்,ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா-கிரண் தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியது.கிரண் தனக்கு கொடுத்த டொயோட்டா கார் கூட தேவையில்லை,10 லட்சம் கொடு 20 லட்சம் கொடு என அடிக்கடி விஸ்மயாவை வரதட்சனை கொடுமை செய்து வந்துள்ளார்.மேலும் ஆணிகள் மற்றும் கட்டைகளை வைத்து விஸ்மயாவின் முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
எனினும்,குடும்பத்தினர் வருத்தப்படக் கூடாது என்பதற்காக விஸ்மயா வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை தனது குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் இருந்தார்.ஆனால் தனது சித்தப்பா மகனிடம் மட்டும் இது குறித்து விஸ்மயா அவ்வப்போது தெரியப்படுத்தி இருந்தார்.அவரது சித்தப்பா மகனுக்கு,”கணவர் எனது முகத்தில் அதிகமாக அடித்து உதைக்கிறார்” என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தனது புகைப்படங்களையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.
இந்த சூழலில்,கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனை அடுத்து விஸ்மயா அப்பா திரிவிக்கிரமன் போலீசில் கிரண் தான் தன் மகளை கொடுமைப்படுத்தி,கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார்.மேலும் உடலில் மோசமான காயங்கள் இருப்பதால் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது தொடர்பாக வரதட்சனை கொடுமை கொலையாகவும் பதிவு செய்தனர்.
இதனையடுத்து,100 பவுன் நகை கொடுத்து ஒரு ஏக்கர் நிலம்,டொயோட்டா கார் என இவ்வளவு ஆடம்பரமாக வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வைத்த பெண்,வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில்,விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண் தான் குற்றவாளி என கேரளாவின் கொல்லம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.மேலும்,தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில்,விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கிரண்குமாருக்கு என்ன தண்டனை என்று கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் இன்று அறிவிக்கவுள்ளார்.அந்த வகையில்,அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.