#JustNow: உத்தர பிரதேசம் – காசி மேலவை தேர்தலில் பாஜக தோல்வி!
உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெட்ரா நிலையில், காசி தொகுதி பாஜக வேட்பாளர் தோல்வி.
உத்தர பிரதேச மாநிலம் மேலவை தேர்தலில் (UP MLC தேர்தல் 2022) காசி தொகுதி பாஜக வேட்பாளர் சுதாமா படேல் தோல்வியை சந்தித்துள்ளார். அங்கு சுயேட்சை வேட்பாளர் அன்னபூர்ணா சிங் 4,234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சி (SP) வேட்பாளர் உமேஷ் யாதவ் 345 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். பாஜக வேட்பாளர் சுதாமா படேல் 170 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் என்று தகவல் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த உத்தர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இருப்பினும், பாஜகவின் இந்த பம்பர் வெற்றியில், ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அதாவது, பிரதமர் மோடியின் கோட்டையான வாரணாசியில் அக்கட்சி தோற்கடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது.
அங்கு 36 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து காலியாக உள்ள 36 சட்டப் பேரவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 9 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 24 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சட்ட மேலவையில் பாஜக பெரும்பான்மையை எட்டியுள்ளது. இந்த முடிவுகள் அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதில், காசி மேலவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் சுதாமா படேல் 170 வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.