#JustNow: மாணவி உயிரிழப்பு – ஷவர்மா கடைகளை மூட உத்தரவு

Default Image

கேராவில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏரளாமானோர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே சுமார் 45 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில், இவர்கள் சாப்பிட்ட உணவில் food poison ஆகியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். ஐடியல் என்ற உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் தான் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதன்பின் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, ஐடியல் உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்