#JustNow: வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – எஸ்.பி.ஐ
வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது என எஸ்பிஐ அறிவிப்பு.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வீடு, வாகனக்கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கடன் வழங்குவதற்கான வட்டி விகித புள்ளியில் 10 புள்ளிகள் (MCLR) உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ நடவடிக்கையால் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.1 சதவீதம் அதிகரிக்கும் என தகவல் கூறப்படுகிறது. ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத புள்ளியின் நூறில் ஒரு பகுதிக்கு சமம். இந்த உயர்வு 15 ஏப்ரல் 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த உயர்வு அனைத்து தவணைக்காலங்களிலும் செயல்படுத்தப்படும், மேலும் தற்போதுள்ள மற்றும் வருங்கால கடன் வாங்குபவர்களுக்கான வீடு, கார் மற்றும் பிற கடன்களின் EMI-க்கள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக மாற்றியமைத்த சில நாட்களுக்குப் பிறகு எஸ்பிஐயின் எம்சிஎல்ஆர் உயர்வு அறிவிப்பு வந்துள்ளது. இதுபோன்று, மற்றொரு பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடாவும் (BoB) கடன் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
BoB நிதி அடிப்படையிலான கடன் விகிதங்களின் 5 bps உயர்த்தியது. 2022 ஏப்ரல் 12 முதல் அமலுக்கு வரும் வகையில் ஒரு வருட கால MLCR ஆனது இப்போது 7.35 சதவீதமாக உள்ளது. MCLR கடன் விகிதம் என்பது ஒரு முக்கிய வட்டி விகிதமாகும், அதாவது வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்க அனுமதிக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம். இது இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆர்பிஐ-யின் புதிய வழிகாட்டுதல் வணிக வங்கிகள் கடன் விகிதங்களை நிர்ணயிப்பதற்கான அடிப்படை விகிதத்தை மாற்றியது. MCLR ஐ நிர்ணயிப்பதில் நிதிகளின் விளிம்புச் செலவு ஒரு முக்கிய காரணியாகும். நிதிகளின் விளிம்புச் செலவைப் பாதிக்கும் ரெப்போ விகிதம் போன்ற முக்கிய விகிதங்களில் ஏதேனும் மாற்றங்கள் MCLR இல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் காலம் வாரியான MCLR:
- ஒரு மாதம்: தற்போதைய விகிதம் – 6.65 சதவீதம், புதிய விகிதம் – 6.75 சதவீதம்
- மூன்று மாதங்கள்: தற்போதைய விகிதம் – 6.65 சதவீதம், புதிய விகிதம் – 6.75 சதவீதம்,
- ஆறு மாதம்: தற்போதைய விகிதம் – 6.95 சதவீதம், புதிய விகிதம் 7.05 சதவீதம்
- ஒரு வருடம்: தற்போதுள்ள விகிதம் – 7.00 சதவீதம், புதிய விகிதம் 7.10 சதவீதம்
- இரண்டு ஆண்டுகள்: தற்போதைய விகிதம் – 7.20 சதவீதம், புதிய விகிதம் 7.30 சதவீதம்
- மூன்று ஆண்டுகள்: தற்போதைய விகிதம் – 7.30 சதவீதம், புதிய விகிதம் 7.40 சதவீதம் என தெரிவிக்கப்படுகிறது.