#JustNow: ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!
பெங்களுருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், பெங்களூரு மற்றும் மைசூருவுக்குச் செல்லும் மோடி, பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் என கூறப்பட்டது. இந்த நிலையில், பெங்களுருவில் ரூ.28,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு மூளை ஆராய்ச்சி மையத்தையும் திறந்து வைத்து, பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பங்கேற்றனர். இதன்பின் இவ்விழாவில் பேசிய பிரதமர், ஏக் பாரத் – ஷ்ரேஷ்டா பாரதத்தின் உணர்வின் பிரதிபலிப்பே பெங்களூரு. பெங்களூருவின் வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான கனவுகளின் வளர்ச்சி. கடந்த 8 ஆண்டுகளாக பெங்களூருவை மேலும் மேம்படுத்த மத்திய அரசின் தொடர் முயற்சி எடுத்து வருகிறது. பெங்களூருவை போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுவிக்க, இரயில், சாலை, மெட்ரோ & சுரங்கப்பாதை, மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட சாத்தியமான அனைத்து வழிகளிலும் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.