முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன்,தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,அதன் மீதான விசாரணை இரு வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது?:
அப்போது,பேரறிவாளனை விடுவிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல் இருக்கிறது எனவும்,குறிப்பாக ஆளுநர், மத்திய உளவு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்பு, இன்னும் இதுதொடர்பாக முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என அடுக்கடுக்கான வாதத்தை பேரறிவாளன் தரப்பு முன்வைத்தது.
அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு கூறுகையில், பேரறிவாளனை விடுவிக்க வேண்டியது தானே,பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் ஏன் ஆளுநர் சிந்திக்க வேண்டும் எனவும்,பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது எனவும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர் இதனைத்தொடர்ந்து, பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம் என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
குடியரசு தலைவருக்குத்தான் அதிகாரம்:
இதனிடையே,மத்திய அரசு தரப்பு கூறுகையில், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது.ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட ஜனாதிபதியே தான் முடிவெடுக்க முடியும்.அரசியல் சாசன பிரிவு 72 மிக தெளிவாக கூறுவதாகவும் வாதத்தை முன்வைத்திருந்தது.
பேரறிவாளனை உடனே விடுதலை:
இதனையடுத்து,இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்,மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு கூறினால், பேரறிவாளனை உடனே விடுதலை செய்து உத்தரவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அரசியலமைப்பு சட்டம்,கூட்டாட்சி தத்துவம் அடிப்படையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தததாக இந்த வழக்கை கருதுவதாகவும், பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்படவேண்டியதுதானே,மாறாக,அமைச்சரவை முடிவை ஆளுநர் ,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சிக்கான அர்த்தம் என்ன?,மேலும்,அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை.இது நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டிய விவகாரம்.எனவே,இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து நாங்கள் முடிவெடுக்க போகிறோம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும்,வருகின்ற செவ்வாய்க்கிழமைக்குள் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால் அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
இன்று மீண்டும் விசாரணை:
இந்நிலையில்,பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.அப்போது பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தனது வாதங்களை முன் வைக்கும் என்று கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…