#JustNow: எல்ஐசி-யின் ஒரு பங்கின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5%  பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்.12-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. காப்பீட்டு நிறுவனத்தின் 5 % பங்குகளை or 31.6 கோடி பங்குகளை மத்திய அரசு விற்கும் என்று கூறியிருந்தது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (LIC) மெகா ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9 நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, எல்ஐசியின் 3.5% பங்குகளை ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் மூலம் மத்திய அரசு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன்மூலம், ரூ.21 ஆயிரம் கோரி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இன்று வாரியம் கூடி சரியான அளவு மற்றும் விலையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகள் விற்பனை ஐபிஓ வாயிலாக மே 4-ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 9-ஆம் தேதி முடிவடையும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியது. அதன்படி, மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடியுடன், பங்கு ஒன்றின் விலை ரூ.902-ரூ.949 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  மே 9 வரை எல்.ஐ.சி-யின் 3.5% பங்குகளை, பொதுப்பங்கு (ஐபிஓ) வழியாக விற்று ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

8 minutes ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

40 minutes ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

8 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

11 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

13 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

13 hours ago