#JustNow: எல்ஐசி-யின் ஒரு பங்கின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்!
மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை, பங்குச் சந்தைகளில் விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளில் 5% பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு திட்ட அறிக்கையை எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்.12-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. காப்பீட்டு நிறுவனத்தின் 5 % பங்குகளை or 31.6 கோடி பங்குகளை மத்திய அரசு விற்கும் என்று கூறியிருந்தது.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (LIC) மெகா ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4 முதல் மே 9 நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, எல்ஐசியின் 3.5% பங்குகளை ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் மூலம் மத்திய அரசு விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதன்மூலம், ரூ.21 ஆயிரம் கோரி நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இன்று வாரியம் கூடி சரியான அளவு மற்றும் விலையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகள் விற்பனை ஐபிஓ வாயிலாக மே 4-ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 9-ஆம் தேதி முடிவடையும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியது. அதன்படி, மே 4-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ள எல்.ஐ.சி-யின் பொது பங்கு ஒன்றின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடி மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடியுடன், பங்கு ஒன்றின் விலை ரூ.902-ரூ.949 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மே 9 வரை எல்.ஐ.சி-யின் 3.5% பங்குகளை, பொதுப்பங்கு (ஐபிஓ) வழியாக விற்று ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.