#JustNow: இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடக்கம்!
இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது.
4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு கூடுதல் இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று தொடங்குகிறது. அதன்படி, இந்தியா தனது முதல் 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இன்று தொடங்குகிறது. நான்கு நிறுவனங்கள் ரூ.4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 72 GHz அலைக்கற்றையை ஏலம் எடுக்க உள்ளனர். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதல் நாளான இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுகிறது. பல்வேறு குறைந்த, நடுத்தர மற்றும் உயர் அதிர்வெண் அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும் என்றும் அலைவரிசைக்கான தேவையை பொருத்து ஏலத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.