#JustNow: கடந்த 24 மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 20 பேர் உயிரிழப்பு.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 17,336 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 15,940 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,234 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 88,284 லிருந்து 91,779 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் இறந்துள்ளனர், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,24,974 பேர் ஆக உள்ளது.
- அதைப்போல, கடந்த ஒரே நாளில் 12,425 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும், இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42761481 ஆக பதிவாகியுள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 196.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,73,341 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.