பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதானவர்கள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு அவரை எரித்திருந்தனர். இதுதொடர்பாக 4 பேரை உடனடியாக காவல்துறை கைது செய்ததிருந்தது. இதன்பின் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகியிருந்தது. இது பல்வேறு சர்ச்சை, பல விவாதங்களை இச்சம்பவம் ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான 4 பேர் கொல்லப்பட்டது போலியானதா அல்லது உண்மையா? என்கவுண்டர் செய்வதற்கு கரணம் என்ன என்பது குறித்து விரிவான விசாரணையை நடத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, சிபிஐ அதிகாரி உள்ளிட்ட 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக்குழு இரண்டு முறை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு, நீண்ட விசாரணை நடத்திய பிறகு இன்று உச்ச நீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட அறிக்கையை விசாரணைக்குழு தாக்கல் செய்தது. அதில், ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதானவர்கள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் தான்.
4 பேரும் கொலை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் என்கவுண்டர் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, இது ஒரு போலி என்கவுன்டர். 4 பேரை என்கவுண்டர் செய்த 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தவறாக கையாளப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…