கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு.
கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியுள்ளனர். சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து அலுவலகம் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏந்திருந்தாக கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றசாட்டியுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி அது வன்முறையாகவும் வெடிக்கிறது. சமீபத்தில் முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியது. இதற்கு பதிலடியை வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடதுசாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடினார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றசாட்டியுள்ளது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…