நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன.
ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே,நாடு முழுவதும் 12-14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் 16,2022 அன்று தொடங்கப்பட்டது.அதன்படி,இதுவரை, 32.2 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும்,18-60 வயதிற்குட்பட்டவர்களுக்கான முன்னெச்சரிக்கை மருந்து(precaution dose) செலுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 10, 2022 முதல் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி,இந்தியாவில் இதுவரை 1.91 பில்லியனை (1,91,79,96,905) தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…