#Justnow:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநில செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனை!

Default Image

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே,நாடு முழுவதும் 12-14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் 16,2022 அன்று தொடங்கப்பட்டது.அதன்படி,இதுவரை, 32.2 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும்,18-60 வயதிற்குட்பட்டவர்களுக்கான முன்னெச்சரிக்கை மருந்து(precaution dose)  செலுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 10, 2022 முதல் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி,இந்தியாவில் இதுவரை 1.91 பில்லியனை (1,91,79,96,905) தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்