#JustNow: கடலோர பகுதிகளில் உஷாராக இருங்கள் – தமிழகத்துக்கு, மத்திய அரசு எச்சரிக்கை!

Default Image

இலங்கையில் சாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு.

இலங்கையில் கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என கூறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் போராட்டம் தீவிரம் காரணமாக நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜ்ஜியமா செய்திருந்தார். இதன்பின்னரும், அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த சமயத்தில் போராட்டம் களம் வன்முறை காலமாக மாறியுள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் அரசியல் தலைவர்கள் வீடுகள் மீது தீ வைப்பு சம்பவம் அரங்கேறி வருகிறது. இலங்கை வன்முறை நாடு முழுவதும் பரவிய நிலையில். ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனிடையே, இலங்கை சிறையில் இருந்து சிறைக்கைதிகள் பலர் தப்பி ஓடியதாக கூறப்பட்டது.

இது மேலும் பதற்றமான சூழலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இலங்கையில் இருந்து தப்பி ஓடிய 58 சிறை கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக கூறி தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் அசாதாரண சூழ்நிலையால் அகதிகளுடன் தேச விரோதிகளும் நுழையலாம் என்பதால், தமிழக கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலை புலி இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலில் ரோந்து பணியை தமிழக கடலோர பாதுகாப்பு படை தீவிரப்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன் தொடரில் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா, இலங்கைக்கு படைகளை அனுப்பாது என வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது. இந்தியா தனது படைகளை அனுப்பலாம் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது. மேலும், இலங்கையின் ஜனநாயகம், பொருளாதாரம் மீள்வதற்கான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets