உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழப்பு.
உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் CHC ஹைதர்கர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள ( Trauma) மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
லோனிக்த்ரா போலீஸ் ஸ்டேஷன் இடத்தின் நரேந்திரபூர் மத்ராஹா கிராமத்திற்கு அருகே இரட்டை அடுக்கு பேருந்து மற்றொரு பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகளும் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தன. அப்போது, விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து மீது வேகமாக வந்த மற்றொரு டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…