#JustNow: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலைப்பட்டனர். இந்த வழித்தடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் இன்றைய என்கவுன்டர் ஒரு பெரிய வெற்றி என்று அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், ஒருவர் நீண்ட நேரமாக உயிர் பிழைத்த ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாதி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அஷ்ரப் மோல்வி (எச்எம் பயங்கரவாத அமைப்பின் மூத்த பயங்கரவாதிகளில் ஒருவர்) மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் எனவும் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் விஜய் குமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ashraf Molvi (one of oldest surviving #terrorist of HM #terror outfit) along with two other terrorists killed. #Successful #operation on yatra route is a major #success for us: IGP Kashmir https://t.co/k8uololRrT
— Kashmir Zone Police (@KashmirPolice) May 6, 2022