#JUSTIN: சந்திர மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடு..! ChaSTE பேலோடின் முதல் அளவீட்டை வெளிட்ட இஸ்ரோ.!
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது, விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோடில் இருந்து முதல் அளவீடு வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
“ChaSTE (சந்திராவின் மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை) சந்திரனின் மேற்பரப்பின் வெப்ப நடத்தையைப் புரிந்து கொள்ள, துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேல்மண்ணின் வெப்பநிலை சுயவிவரத்தை அளவிடுகிறது. இது மேற்பரப்புக்கு அடியில் 10 செ.மீ ஆழத்தை அடையும் திறன் கொண்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஊடுருவல் பொறிமுறையுடன் பொருத்தப்பட்ட வெப்பநிலை ஆய்வு கருவி உள்ளது.
“அதில் 10 தனிப்பட்ட வெப்பநிலை உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது வழங்கப்பட்ட வரைபடம், அந்த கருவியின் ஊடுருவலின் போது பதிவுசெய்யப்பட்டபடி, பல்வேறு ஆழங்களில் சந்திர மேற்பரப்பு/மேற்பரப்புக்கு அருகில் வெப்பநிலை மாறுபாடுகளை விளக்குகிறது. சந்திர தென் துருவத்திற்கு இதுவே முதல் சுயவிவரம். விரிவான அளவீடுகள் நடைபெற்று வருகின்றன.” என்று இஸ்ரோ பதிவிட்டுள்ளது.