முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிலை இன்று காலை ஆழ்ந்த கோமாவில் உள்ளார் மருத்துவமனை அறிக்கை.
பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின் புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் மூளையில் சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அன்மையில் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக இவர் உடல் நிலை கவலை கிடமாக இருக்கிறது என மருத்துவமனை தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார் என புதுடில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் நிலை இன்று காலை மாறாமல் உள்ளது. அவர் ஆழ்ந்த கோமாவில் உள்ளார் எனவும் வேண்டி லெட்டர் ஆதரவில் உள்ளார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…