ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Justice4KashmiriHindus ஹாஷ்டேக் .! காரணம் என்ன..?

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் தான் பண்டிதர்கள் ஆவர்.கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் மிரட்டலுக்கு பயந்து ஒரே இரவில் 8 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காரணம் அவர்கள் விதித்த மூன்று நிபந்தனைகள்தான்.தீவிரவாதிகளால் தங்களின் உயிருக்கும் , குடும்ப பெண்கள் ,குழந்தைகளின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காஷ்மீர் சமவெளியை விட்டு காஷ்மீர் பண்டிதர்கள்  ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் அகதிகளாக சென்றனர்.

அப்போது தீவிரவாதிகள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரை ஜீலம் நதியில் கொலை செய்து தூக்கி எறிந்தனர்.மேலும் வெளியேறாமல் இருந்தவர்களின் வீடுகளில் புகுந்து வயது வித்தியாசம் இல்லாமல் வன்கொடுமை செய்தனர்.மேலும் அந்த பெண்களை நிர்வாணமாக தெருவில் ஓடவிட்டு கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது 800 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இடிக்கப்பட்டனர்.அவர்களை காஷ்மீரிலிருந்து விரட்டியடித்தது அது முதல் முறையல்ல 7-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 30 வருடங்கள் ஆகிறது.எனவே இந்த சம்பவத்தை அனுசரிக்கும் விதமாக #Justice4KashmiriHindus என்ற ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்