கொரோனோவால் சத்தீஸ்கர் முன்னாள் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம் !
சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி காலமானார் .
முன்னாள் நீதிபதி திரிபாதி க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் அவருக்கு இன்று (சனிக்கிழமை ) இரவு 9 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52 .
ஏ.கே.திரிபாதி இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பாலின் நீதித்துறை உறுப்பினராகவும், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.
அவர் கடந்த மாதம் எய்ம்ஸில் கோவிட் -19 க்கு சோதனை செய்தார் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது . அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்துக்குள்ளானவர்கள் சேர்க்கப்படும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் .பின்னர் அந்த பகுதி கோவிட் -19 க்கான பிரத்தேக மருத்துவமனையாக மாற்றப்பட்டது .திரிபாதி தான் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நபர் .
அதன் பின்னர் கடந்த 3 நாட்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.இந்தியாவில் உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல் முறை.