விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பணியிடைநீக்கம் !

Default Image

நடுவானில் இரு விமானங்கள் மும்பையில்  மோதிக்கொள்ள இருந்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்ட சம்பவத்தில், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ஏர்இந்தியாவின் ஏர்பஸ் ஏ-319 விமானம், மும்பையிலிருந்து போபால் சென்றுகொண்டிருந்தது. இதேபோல விஸ்தாராவின் ஏ-320 நியோ விமானம் டெல்லியிலிருந்து புனேவுக்கு வந்துகொண்டிருந்தது.

விஸ்தாரா விமானம் 29 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 27 ஆயிரத்து 100 அடிக்கு கீழே இறங்கிக் கொண்டிருந்த அதேநேரத்தில் எதிர்த்திசையில் அதேதடத்தில் ஏர்இந்தியா விமானம் வந்துகொண்டிருந்தது.

இரு விமானங்களும் சில நொடிகளில் நெருங்கக் கூடிய தூரத்தில் இருந்த நிலையில், ஏர்இந்திய விமானத்தில் இருந்த பெண் விமானியான கேப்டன் அனுபமா கோலி விஸ்தாரா விமானம் வருவதை கவனித்துவிட்டார்.

மேலும் விஸ்தாரா விமானிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்குமான உரையாடலை செவிமடுத்துள்ளார். குழப்பம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த அதேநேரத்தில் உயரே செல்லுமாறு வந்த அறிவுறுத்தலை ஏற்று, உடனடியாக விமானத்தை இன்னும் அதிக உயரத்தில் செலுத்தி, நடுவானில் மோதல் ஏற்படுவதை அனுபமா கோலி தவிர்த்து விட்டார். இதன் மூலம் இரு விமானங்களிலும் இருந்த 261 பயணிகள் உயிர்தப்பினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்