உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்,அரசியலில் தலையிட வேண்டாம் -ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

Default Image
  • போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். 
  • உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், அரசியலில் தலையீடு வேண்டாம் என்று பிபின் ராவத்துக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக இந்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டும் வருகின்றனர்.

இது குறித்து  ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், உங்களை சரியாக வழிநடத்துபவர்கள் தான் தலைவர்கள். தவறாக வழி வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல.கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் பெரிய அளவில் கூடி போராட்டம் நடைபெற்றப்போது  நகரங்களில் வன்முறைச் சம்பவஙகள் அரங்கேறியது தலைமை அல்ல என்று தெரிவித்தார்.

இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 135 ஆவது ஆண்டு விழா கொண்டாப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.அவர் பேசுகையில், ராணுவத் தலைவர் அரசாங்கத்தை ஆதரிக்கும்படி கேட்கிறார்கள்,இது அவமானம்.ராவத் நீங்கள் ராணுவத்தின் தலைவராக உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.எப்படி ஒரு போரை நடத்த வேண்டும் என்று உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.அதுபோல் அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமென சொல்வது ராணுவத்தின் வேலை  இல்லை என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்