ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்….! இனிமேல் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பெற காத்திருக்க வேண்டாம்….!

Default Image

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கு இனிமேல் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் எனும் அதிரடி அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம் வைத்தியா அவர்கள் ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு மிஸ்டுகால் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி நாடு முழுவதும் உள்ள விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் 84549 555555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்களுக்கான புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்படும்.

இந்தியன் ஆயில் செயலியின் http://cx.indianoil.in வலைத்தளம், 75888 88882 எனும் வாட்ஸப் நம்பர் அல்லது 77189 55555  எனும் குறுஞ்செய்தி நம்பர் மூலமாக சமையல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கட்டணத்தை அமேசான், பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற செயலி மூலமாக செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் ஒரு இணைப்பு கேஸ் சிலிண்டர் வசதியை கொண்டவர்களாக இருந்தால், இரட்டை இணைப்பு பெறும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக வாங்கக்கூடிய 14.2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டருக்கு பதிலாக ஐந்து கிலோ சிலிண்டர் பெரும் வசதியையும் வாடிக்கையாளர்களால் பெற முடியும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi