பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள்.
பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். மேலும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும். பான் மற்றும் ஆதாரை எளிமையாக டிஜிட்டல் முறை வழியாக சில நிமிடங்களில் இணைக்க முடியும்.
முதலில் எஸ்எம்எஸ் மூலமாக இணைப்பது எப்படி என்று பார்க்கலாம். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக எளிமையாக இரண்டையும் இணைக்கலாம். அதற்கு UIDPAN<space><12 digit Aadhaar><space><10 digit PAN> இவற்றை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு UIDPAN 000011112222 AAAAA0011B இதுபோன்று உங்களுடைய எண்களை சரியாக டைப் செய்து அனுப்ப வேண்டும். அனுப்பிய பிறகு உங்களின் பெயர், பிறந்ததேதி பான் மற்றும் ஆதாரில் சரிபார்க்கப்பட்டு பின்னர் இணைக்கப்படும்.
இரண்டாவதாக வலைத்தளம் வழியாக இணைப்பது. இதற்கு வருமானவரி துறையின் போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். incometaxindiaefiling.gov.in. இதனுள் சென்றபின் இணைப்பு ஆதார் பிரிவு காண்பிக்கும். அதில் நுழைந்தபின், பெயர், பான் எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் கேட்கப்படும். சரியான தகவல் செலுத்திய பிறகு, உங்களின் ஆவணங்களை சரிபார்த்து பின்னர் பான் மற்றும் ஆதார் எண் இணைக்கப்படும். இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…