ரபேல் வழக்கில் தீர்ப்பு ! எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி – அமித்ஷா
ரபேல் வழக்கில் எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ரபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி. மோடி அரசு ஊழல் இல்லா வெளிப்படையான அரசு என்பதை இந்த தீர்ப்பு மீண்டும் உணர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.