ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு – 144 தடை;பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!
கர்நாடகா மாநிலத்தில் முன்னதாக அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம்’ என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர்.அதன்பின்னர்,ஹிஜாப்புக்கு ஆதரவாக மற்றும் எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இதனையடுத்து,முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணைக்கு விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில்,ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும்,ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் பெங்களூரில் மார்ச் 21 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ஆர்ப்பாட்டம்,போராட்டம்,பொதுவெளியில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி,உடுப்பி மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,உடுப்பி, கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Karnataka High Court to pronounce judgment in Hijab row case today.
Visuals from Udupi city; Sec 144 imposed in Udupi and other districts of the state. District Magistrate Kurma Rao M had y’day announced that all schools & colleges in the district will remain closed on March 15. pic.twitter.com/aPZ3usa1t5
— ANI (@ANI) March 15, 2022