செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி மீது புகார்!4 பேர் மீது நடவடிக்கையா ?
இன்று காலை உச்சநீதிமன்றம் தொடங்கியதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் லூத்ரா ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தின் மாண்பை குலைப்பதற்கான சதித்திட்டம் நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். எனவே செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகியோர் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர் லூத்ரா பேசியதை உன்னிப்பாக கவனித்த தலைமை நீதிபதி மிஸ்ரா, சிரித்துக் கொண்டே எதுவும் பேசாமல் வேறு வழக்கு விசாரணையை தொடங்கினார்.
இதனிடையே உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகியோர் இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்து தங்கள் வழக்கமான பணிகளை தொடங்கினர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார்.