பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சந்தித்து பேசினார். இதற்காக பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் தாங்கி இருந்தார்.நேற்று மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி ஈடுபட்டிருந்த மோடி அங்கு உள்ள குப்பைகளை தனது கையால் அகற்றினார்.
அவர் குப்பைகளை அகற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் தெலுங்கானா உயர்நீ நீதிபதி சஞ்சய் குமார் பஞ்சாப்பில் உள்ள மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.அதனால் அவருக்கு பாராட்டு விழா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நீதிபதி சல்லா கொண்டாரம் உட்பட சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது அனைவரும் டீ குடிப்பதற்காக பேப்பர் கப்புகள் கொடுக்கப்பட்டன.
குப்பைத்தொட்டி சற்று தூரத்தில் இருந்ததால், அங்கு உள்ள புல்வெளியில் டீ கப்புகளை போட்டு விட்டு சென்று விட்டனர். இதை பார்த்த நீதிபதி சல்லா கொண்டாரம் புல் தரையில் கிடந்த டீ கப்புகளை தனது கையால் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டார். இதை பார்த்த மற்றவர்களும் புல் தரையில் கிடந்த குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…