ஜெய்ப்பூரை சார்ந்த மயங்க் பிரதாப் சிங் (21).இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து உள்ளார்.இந்த இளநிலை சட்டப் படிப்பு இந்த வருடத்துடன் முடிந்து உள்ளது.
இந்நிலையில் நீதித்துறை பணிக்கான தேர்வை மயங்க் பிரதாப் சிங் எழுதியுள்ளார். நீதித்துறை பணிகளுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது. பின்னர் வயது 21 ஆக குறைக்கப்பட்டது.இதனால் மயங்க் பிரதாப் சிங் நீதித்துறை பணிக்கான தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு எழுதிய பிரதாப் சிங் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் அவர்களுக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற பெருமையை பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் , “முதல் முயற்சியில் நீதித்துறை தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. வயது குறைக்கப்பட்டதால் தான் நான் இந்த தேர்வை எழுத முடிந்தது. அதிகமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்காக கண்டிப்பாக கடினமாக உழைப்பேன்” என கூறினார்
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…