அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நசீர் க்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் நாசீருக்கும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள் பாப்டே,சந்திராசூட்,அசோக் பூஷன்,அப்துல் நாசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சுமூகமாக அமைந்தது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியான அப்துல் நாசீருக்கும் அவருக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்துல் நாசீர் மற்றும் அவரது குடும்பத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நாசீர் முக்கிய வழக்குகளாக கருதப்படும் அயோத்தி மற்றும் ஆதார் வழக்கில் தீர்ப்புகளை அளித்தவர் ஆவார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே நியமனம் செய்ய ரஞ்சன் கோகாய் உடன் இணைந்து முடிவு செய்தவர் ஆவார்.