மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா..!

JP Nadda: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தனது மாநிலங்களவை எம்.பி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலங்களவையின் சேர்மன் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் குஜராத்தில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்தே ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களவை பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அதில் ஒருவர் நட்டா ஆவார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற 41 வேட்பாளர்களில் நட்டாவும் ஒருவர்.

Read More – இனிமேல் முன்பின் தெரியாத பெண்ணை இவ்வாறு அழைத்தால் சிறை.!

குஜராத்தில் இருந்து வைர வர்த்தகர் கோவிந்த்பாய் தோலாக்கியா, கட்சியின் தலைவர் ஜஸ்வந்த்சிங் பர்மர், ஓபிசி மோர்ச்சா தலைவர் மயங்க் நாயக் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாஜக தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் கட்சித் தலைவர் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்