வடகிழக்கு டெல்லியில் வன்முறை குறித்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் இடையில் செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த இரண்டு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 2 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்தனர்.அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையெடுத்து இந்த வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் , முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வல் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…