சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உயிரிழப்பு

சுட்டுக் கொல்லப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார்.
விக்ரம் ஜோஷி என்பவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாப்பத்தில் உள்ள விஜய் நகரை சேர்ந்தவர்.இவர் அங்குள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்மநபர்கள் சிலர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே ஜோஷியின் உறவினர் பெண்ணுக்கு ஒரு சில நபர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் அவர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆனால் அவரின் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத போலீசார் ராகவேந்திரா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜோஷியின் மரணம் குறித்து மருமகன் கூறுகையில், கமல்-உத்-தின் மகன் உட்பட சில சிறுவர்கள் என் சகோதரியை கிண்டல் செய்தனர்.சகோதரிக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் மீது மாமா புகார் அளித்தார்.கமல் உத் தின் என்பவரின் மகன் தான் விக்ரமை சுட்டது. அவர்களை கைது செய்யும் வரை எங்கள் மாமாவின் உடலை நாங்கள் வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025