பாலம்பூர் மாவட்டத்தில் கோட்வாலி தேஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் தீ விபத்தில் ஒரு பத்திரிகையாளர் அவரது நண்பரும் சேர்ந்து உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் இந்தி நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்த ராகேஷ் சிங்கின் நண்பர் பிந்து சாஹு என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்னர்.
கல்வாரி கிராமத்தில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ராகேஷ் சிங் மற்றும் அவரது நண்பர் பிந்து சாஹு ஆகியோருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக பால்ராம்பூர் காவல் கண்காணிப்பாளர் தேவ் ரஞ்சன் வர்மா தெரிவித்தார்.
சாஹு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தபோது, சிங் 90 சதவீத தீக்காயங்களுடன் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு, அவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து காவல்துறையினரின் கூறுகையில், தம்பதியினரிடையே ஏற்பட்ட சில தகராறுகளைத் தொடர்ந்து ராகேஷ் சிங்கின் மனைவியும் குழந்தைகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினரின் வீட்டிற்குச் சென்றிருந்தனர் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்தது ஒரு தற்கொலை என்று காவல்துறை முடிவு செய்தது.
இருவரும் ஒரு அறையில் பூட்டப்பட்டு பின்னர் தீக்குளித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், வீட்டிலுள்ள மற்ற அறைகள் எதுவும் தீப்பிடித்ததில்லை. இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…