#Breaking:முன்னாள் மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்…!

Published by
Edison

முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா நள்ளிரவு காலமானார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த  பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா புதன்கிழமை(நேற்று) நள்ளிரவு காலமானார்.அவருக்கு வயது 66.இதனை, அவரது மகன் குஷன் மித்ரா செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,சந்தன் மித்ரா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து,மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா ட்விட்டரில் தனது நெருங்கிய நண்பரை இழந்ததாக கூறினார். 1972 இல் பள்ளிப் பருவத்தின்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்ட எம்பி தாஸ்குப்தா கூறியதாவது:

“எனது நெருங்கிய நண்பர் – முன்னோடி ஆசிரியர் மற்றும் முன்னாள் எம்.பி சந்தன் மித்ராவை இன்று காலை இழந்தேன். நாங்கள் லா மார்டினியரின் மாணவர்களாக ஒன்றாக இருந்தோம் .செயின்ட் ஸ்டீபன் மற்றும் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றோம். நாங்கள் ஒரே நேரத்தில் பத்திரிகைத் துறையில் சேர்ந்தோம்,அயோத்தியின் உற்சாகத்தையும், காவி அலையையும் பகிர்ந்து கொண்டோம்.

நான் 1972 இல் பள்ளி பயணத்தின் போது சந்தன் மித்ராவும் நானும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள். ஓம் சாந்தி”,என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி.சந்தன் மித்ரா டெல்லியில் பயோனீர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.அவர் ஆகஸ்ட் 2003 முதல் ஆகஸ்ட் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ஜூன் 2010 இல் மத்திய பிரதேசம் எம்.பி.யாக பதவி வகித்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயுடன்,சந்தன் மித்ரா அவர்கள்  நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

7 minutes ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

45 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

1 hour ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

2 hours ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago