ஜோஷிமத் – ஹோட்டல்கள் இடிக்கப்படும்.. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1.5 லட்சம் நிவாரணம்!
நிலச்சரிவு எதிரொலியால் ‘பாதுகாப்பற்ற’ ஜோஷிமத் ஹோட்டல்கள் இடிக்கப்படும் என அறிவிப்பு.
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலம் சரிந்ததால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மாநில செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
பாதுகாப்பற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஹோட்டல் கட்டிடங்களைத் தவிர, வேறு எந்தக் கட்டிடமும் இடிக்கப்படாது என்றும் கூறியுள்ளார். ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இழப்பீடு வழங்கக் கோரி, விடுதிகள் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டு ஹோட்டல் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.