பாஜகவில் இணைந்த தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் , பாடகி சப்னா சவுத்ரி !
நாடு முழுவதும் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசத்தில் கடந்த 06-ம் தேதி இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் முறைப்படி உறுப்பினராக சேர்ந்து கொண்டார். அஞ்சு ஜார்ஜ்க்கு கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா உறுப்பினர் அட்டையை கொடுத்தார்.
கேரளா மாநிலத்தை சார்ந்த அஞ்சு ஜார்ஜ் கடந்த 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற முதல் தடகள பெண் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் இந்தி பாடகியும் ,நடன கலைஞருமான சப்னா சவுத்ரி பாஜக கட்சியில் முறைப்படி தன்னை இணைத்து கொண்டார்.