வழக்கை முடிக்க சுமார் 890 கோடி டாலர் வழங்க ஜான்சன் & ஜான்சன் முடிவு!
புற்றுநோயை உண்டாக்குவதாக தொடரப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க 8.9 பில்லியன் டாலர் தர ஜான்சன் & ஜான்சன் முடிவு.
ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடர், புற்றுநோயை உண்டாக்குவதாக தொடரப்பட்ட வழக்குகளை முடிக்க, வழக்கு தொடுத்த ஆயிரக்கணக்கானோருக்கு 8.9 பில்லியன் டாலர் தர முன்வந்துள்ளது அந்நிறுவனம். இந்த விஷயத்தில் விரைவாகவும் திறமையாகவும் தீர்வுகாணவே இந்த முன்மொழிவு, மற்றபடி எங்களின் பொருள் பாதுகாப்பானதே என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், நீதிமன்றம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஜான்சன் & ஜான்சன் தனது பேபி பவுடர் மற்றும் பிற டால்க் அடிப்படையிலான தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாகக் கூறி தொடுக்கப்பட்ட சுமார் 40,000 வழக்குகளைத் முடித்து வைக்க கிட்டத்தட்ட $9 பில்லியன் (₹73,000 கோடி) செலுத்த அந்நிறுவனம் முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.