இனி இறந்த அரசு ஊழியர்களின் மகள்களுக்கும் வேலை – உத்தர பிரதேச அரசு!

Default Image

இனி இறந்த அரசு ஊழியர்களின் மகள்களுக்கும் வேலை கொடுக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களின் நலன் கருதி அம்மாநில அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  முன்பெல்லாம் அரசு ஊழியர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது வீட்டில் உள்ள மகன்கள் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு மட்டும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பணியில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது திருமணமான மகளுக்கும் அரசு சார்பில் அரசு வேலை கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று வெளியாகியது.

அதில், பணியின்போது உயிரிழக்கக் கூடிய அரசு அதிகாரியின் திருமணமான மகள், அவரது சகோதரனை போலவே கருணை அடிப்படையில் பணி வழங்க தகுதி உடையவர் என தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்