இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன..! பிரதமர் மோடி
உத்தரகண்ட் மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் ரோஸ்கர் மேளாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். அப்பொழுது கடந்த சில மாதங்களுக்கு முன், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன கடிதம் வழங்கியது. எந்தெந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி இருக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் பெரிய அளவில் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.
மலை நீரும், மலை இளமையும் மலைக்கு பயன் இல்லை ‘பஹத் கா பானி அவுர் பஹத் கி ஜவானி பஹத் கே காம் நஹி ஆத்தி’ என்ற பழைய எண்ணத்தை மாற்ற வேண்டும். அதனால் உத்தரகாண்ட் இளைஞர்கள் மற்றும் நமது இளம் தலைமுறையினர் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்றும் கூறினார்.
இதையடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. உத்தரகாண்டில் உள்கட்டமைப்பை சீரமைக்க முதலீடு செய்யப்படுகிறது. இதனால் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்வது எளிதாவதோடு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.