இரயில்வே_யில் வேலைவாய்ப்பு ….பாஜகவின் ஏமாற்று வேலை…கடுமையாக விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர்…!!

Default Image

இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி பாரதீய ஜனதா கட்சி மக்களை ஏமாற்றுகிறது என்று  ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரயில்வே துறையில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலைவாப்பு ஏற்படுத்தப்படுமென மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறுகையில் 1 லட்சத்து 51 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நடவடிக்கை தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார்.அமைச்சரின் இந்த அறிவிப்பை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஏமாற்று வேலை என டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் நான்கரை ஆண்டுகளாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணியிடங்களை காலியாக வைத்த பாஜக அரசு, திடீரென விழித்துக்கொண்டு அடுத்த 3 மாதங்களில் பணியிடங்களை நிரப்புவதாக கூறுவதா ? என கேள்வி எழுப்பி  ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்