45 நாட்களில் வேலை.. 6000 அங்கன்வாடி பணியிடங்கள்.! பஞ்சாப் முதல்வரின் அதிரடி அறிவிப்பு.!

Default Image

பஞ்சாபில் 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் நிரப்பப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் காலிப்பணியிடங்களை வேகமான நிரப்ப முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி , பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 6000 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் இன்னும் 45 நாட்களில் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். ஊழல், சிபாரிசு ஆகியவை இதில் இடம்பெறாது. தகுதி உள்ளவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். 4,300 பஞ்சாப் காவல்துறை பணியிடங்கள் நிரப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் நாட்களில் பணிநியமன கடிதம் வழங்கப்படும் எனவும்  முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்