கொரோனா பாதிப்பால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டில் இருந்த ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த துவங்கி உள்ளன. இதனால் இணைய பயன்பாடு அதிகமாகி வருகிறது.
இது குறித்து மொபைல் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், ‘இந்த சங்கத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளன. இதன்படி இணைய பயன்பாடு சராசரியாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் பயன்பாடு அதிகரித்ததால் இணைய சேவையில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத அளவுக்கு நெட்வொர்க் அமைத்து செயல்படுத்தி வருகின்றன. தற்போது இந்த நெட்வொர்க்கில் முதல் 65 முதல் 70 சதவீதம் தான் பயன்பாட்டில் உள்ளது. எனவே பயன்பாடு மேலும் அதிகரித்தாலும் எளிதாக சமாளித்துவிடலாம்.’ என்று கூறியுள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி,…
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…