பேரணி நடத்திய டெல்லி கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

Published by
மணிகண்டன்
  • டெல்லி ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • இன்று நடைபெற்ற பேரணியில் போலீசார் லேசான தடியடி நடத்தி மாணவர்கள் பேரணியை கலைத்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், அந்த கல்லூரியில் விடுதி கட்டணம், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராஷ்ட்ரபதி பவனை நோக்கி பேரணி நடத்த இருந்தனர். ஆனால், போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் பேரணி நடத்தினர்.

மாணவர்கள் சரோஜனி சாலையை கடந்த போது, தடுத்து நிறுத்தப்பட்டனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதாக கூறி மாணவர்களை கலைந்து போக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மாணவர்கள் கலைந்து போக மறுத்து பேரணியில் முன்னேற பார்த்தனர் அதனால் லேசான தடியடி நடத்தி மாணவர்கள் பேரணியை கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

52 seconds ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

44 minutes ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

2 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

2 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

2 hours ago