ஜேஎன்யூ மாணவர்கள் தாக்குதல் விவகாரம்… தாக்குதல் நடத்தியது ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு.. கையும் களவுமாக சிக்கியது ஏபிவிபி..
- ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.
- தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று அடையாளம் க கண்டுபிடித்துள்ளது டெல்லி காவல் துறை.
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கொடூரத்தையே நிகழ்த்தினார்கள்.
மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் சில மாணவிகளும் உள்ளே புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அதிலும் சிவப்பு சட்டை போட்ட இந்த பெண் , கையில் கத்தி வைத்துக்கொண்டு சக மாணவர்களை மிரட்டியும் கொடூரமாக தாக்கியும் உள்ளார். இந்நிலையில் இவரின் அடையாளத்தை டெல்லி காவல்துறை கண்டிபிடித்துள்ளது . இந்த சிவப்பு சட்டை அணிந்த பெண் கோமல் சர்மா. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர் என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் டாவ்லாட் ராம் கல்லூரியை சேர்ந்தவர் ஆவர்,
இவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இவரை காவல்துறை மூன்று முறை அழைத்தும் கூட, இன்னும் ஆஜராகவில்லை. மேலும், இவரின் அடையாளத்தை தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியும் உறுதி செய்துள்ளது. எனவே இந்த விவகாரம் தற்போது இந்தியாவையே உற்றுநோக்க வைத்துள்ளது.