ஜே.என்.யு பல்கலைகழக மாணவர்கள் விவகாரம்… போராட்டத்திற்க்கு பிரபல பாலிவுட் நடிகை நேரில் சென்று ஆதரவு..

Default Image
  • தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று  நடந்தது.
  • அப்போது, அங்கு முகத்தை மூடி துனியை  அணிந்து வந்த மா்ம நபர்கள் இரும்பு கம்பி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால்  மாணவர்களை சரமாரியாக கொடூரமாக  தாக்கினர்.
     இந்த கொடூர  தாக்குதலில் பல மாணவர்கள்  காயம் அடைந்தனர். இந்த மாணவர்கள் மீதான இந்த கொலைவெறி தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. இந்த மனித தன்மையற்ற செயலுக்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தங்களது  கண்டனத்தை  தெரிவித்திருந்தனர். இந்த  தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை வலை வீசி தேடி வந்த நிலையில்,  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது என்றும் அதனால் தான்  நாங்கள்  இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி  அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Image result for deepika padukone in jnu
இந்த விவகாரம் தொடர்பாக   டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் பல்வேறு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி   ஜவஹர்லால் நேரு பல்கலைகழக  வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்   மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு  பிரபல பாலிவுட் நடிகையான  தீபிகா படுகோனே திடீரென போராட்டம் நடக்கும் இடத்திற்க்கே நேரில் சென்று தனது ஆதரவை  தெரிவித்தார். நடிகை மாணவர்களின் போராட்டத்திற்கு  தனது ஆதரவு தெரிவித்தது பாலிவுட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது மீண்டும் மிகப்பெரிய பூதாகரமாக வெடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்