இந்த கொடூர கொலைவெறி தாக்குதலால் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் காயமடைந்தனர். இதற்கு பல அமைப்புகளும் , அரசியல்தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கு உரிய வகையில், 9 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், டெல்லி துறையின் தீவிர முயற்சியால் தற்போது உண்மை வெளிவந்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களின் படங்களை பார்க்கும் போது, இடதுசாரி மாணவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெளிவாகிறது. எனவே, மாணவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டும். கல்வியை தொடங்கவும் , விசாரணைக்கும் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும். இந்திய பொதுத்தேர்தலில், இந்தியன் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள்இந்திய மக்களால் புறக்கணிக்கபட்டன. அதனால் தான் இடது சாரிகள் அவர்களின் நலனுக்காக மாணவர்களை பயன்படுத்துகின்றனர் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இந்த விவகாரத்தில் இடதுசாரி ஒருவரே மாணவர் போராட்டத்தில் தாக்குதல் நடத்தியது மாணவ சமுதாயத்திடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…