ஆட்சியைத் தக்க வைக்கிறதா ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி? ஜார்க்கண்ட் தேர்தல் நிலவரம் என்ன?

ஜார்கண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக்தி ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது.

JMM - Congress

ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த நவ-14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதியும் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதியது. நடைபெற்ற இந்த தேர்தலில் 67.74% சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஜார்காண்டில் வெற்றி பெரும்பான்மைக்குத் தேவையானது 41 இடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வந்த நிலையில், அதன் பிறகு, ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி முன்னிலைப் பெற்றது. தற்போதைய நிலவரப்படி, 49 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது.

அதே போல பாஜக கூட்டணி 30 இடங்களில் பின்னிலை பெற்று வருகிறது. தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் ஜார்கண்ட் சட்டமன்ற தொகுதியில் ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW
Eiffel Tower fire